கடல்சார் இலகுரக ஹெலிகாப்டர் தயாரிக்க கடற்படை மற்றும் கடலோர காவல்படையுடன் கைகோர்த்த HAL !!

பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் LUH Light Utility Helicopter எனும் வானூர்தியை தயாரித்தது அனைவருக்கும் தெரியும்.

இவற்றை இந்திய விமானப்படை மற்றும் இந்திய தரைப்படை பயன்படுத்தி வரும் அரதப்பழைய சேத்தக் மற்றும் சீட்டா இலகுரக ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக HAL தயாரித்தது, இந்த நிலையில் தற்போது இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவற்றின் தேவையை பூர்த்தி செய்யவும் திட்டமிட்டு உள்ளனர்.

அந்த வகையில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து Maritime LUH அதாவது கடல்சார் இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் ஒன்றை தயாரிக்க ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கடற்படைக்கு மொத்தமாக சுமார் 111 NUH Naval Utility Helicopter அதாவது கடற்படை பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் தேவைப்படும் நிலையில் அவற்றில் 60 ALH த்ரூவ் ரகமாகவும் மீதமுள்ள 51 ஹெலிகாப்டர்கள் கடல்சார் இலகுரக ஹெலிகாப்டர்களாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்திய கடலோர காவல் படைக்கும் இத்தகைய ஹெலிகாப்டர்கள் தேவை ஆனால் இவை மிக மிக இலகுவாக இருக்க வேண்டும் அதற்கேற்றவாறு எடை குறைந்த ஏவியானிக்ஸ், சென்சார் அமைப்புகள், அதிக எடை சுமக்கும் திறன் மற்றும் கப்பலில் நிறுத்தி வைக்கும் அளவுக்கு தோதான வகையில் வடிவமைக்கப்ப வேண்டும் ஆகியவை கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.