தப்பிக்கும் இருக்கைகளை வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இந்தியா திட்டம் !!

  • Tamil Defense
  • November 4, 2022
  • Comments Off on தப்பிக்கும் இருக்கைகளை வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இந்தியா திட்டம் !!

இந்தியாவின் HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் போர் விமானங்களுக்கான தப்பிக்கும் இருக்கைகளை தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த இருக்கைகள் மூலமாக வெவிநாட்டு இறக்குமதி குறையும் மேலும் இந்தியா வருங்காலத்தில் தயாரிக்கும் போர் விமானங்களில் இவற்றை பயன்படுத்தி கொள்ளவும் அதன்மூலம் சுதேசிமயமாக்கலை அதிகப்படுத்தவும், முழு வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு உரிமம் பெறவும் திட்டமிட்டு உள்ளனர் இதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது இந்தியா பிரிட்டிஷ் நிறுவனமான Martin Baker தயாரிக்கும் தப்பிக்கும் இருக்கைகளை வாங்கி பயன்படுத்தி வருகிறது, இந்த நிறுவனமும் தற்போது இந்தியாவின் இந்த திட்டத்தில் இணைய ஆர்வம் காட்டி வருகிறது,

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அர்ஜென்டினா நமது போர் விமானங்களை வாங்கினால் அதில் இந்த இருக்கைகள் இருக்கும் பட்சத்தில் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து இடையேயான பிரச்சினை காரணமாக இந்தியா போர் விமானத்தை விற்பதற்கு முட்டுக்கட்டை போடலாம் அப்படி தான் இத்தனை ஆண்டுகளாக அர்ஜென்டினா போர் விமானங்கள் வாங்குவதை இங்கிலாந்து தடுத்து வருகிறது.

இது தவிர அமெரிக்க விமானப்படையின் F-15, F-16, F-22, B1 மற்றும் B2 போன்ற விமானங்களுக்கு தப்பிக்கும் இருக்கைகளை தயாரித்து வழங்கிய அமெரிக்க நிறுவனமான Collins Aerospace அவர்களுடைய பிரபலமான ACES-5 இருக்கைகளை இந்தியாவிலேயே தயாரிக்க விருப்பம் தெரிவித்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.