CATS திட்டத்திற்கு ஆளில்லா தானியங்கி ஹெலிகாப்டரை உருவாக்கும் HAL !!
1 min read

CATS திட்டத்திற்கு ஆளில்லா தானியங்கி ஹெலிகாப்டரை உருவாக்கும் HAL !!

HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் CATS Combat Air Teaming System எனப்படும் வான் தாக்குதல் குழு அமைப்பை உருவாக்கி வருகிறது, இந்த திட்டத்தில் ஏற்கனவே பல வானூர்திகள் உள்ளன.

இந்த நிலையில் தற்போது இதற்காக ஒரு ஆளில்லா தானியங்கி ஹெலிகாப்டர் ஒன்றை HAL Hindustan Aeronautics Limited நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இதற்காக New Space Research & Technologies எனும் தனியார் துறை நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து உள்ளனர்.

அவர்கள் இதையொட்டி வெளியிட்ட காணொளி ஒன்றில் HAL Dhruv த்ரூவ் ரக ஹெலிகாப்டரை அடிப்படையாக கொண்ட ஆளில்லா தானியங்கி ஹெலிகாப்டர் ஒன்று காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

இதே போல கடந்த 2000 ஆண்டுகளின் இறுதியில் HAL நிறுவனம் இஸ்ரேலை சேர்ந்த IAI Israel Aerospace Industries நிறுவனத்துடன் இணைந்து இந்திய கடற்படைக்காக NRUAV Naval Rotary Unmanned Aerial Vehicle கடற்படை ஆளில்லா ஹெலிகாப்டர் ஒன்றை சேட்டக் ஹெலிகாப்டரை அடிப்படையாக கொண்டு உருவாக்க திட்டமிட்ட நிலையில் பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.