
சமீபத்தில் இந்திய விமானப்படையில் இணைந்த இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டரான ப்ரச்சந்த் விரைவில் தொலைதூர துல்லிய தாக்குதல்களை மேற்கொள்ள உதவும் அதிநவீன குண்டுகளை பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த குண்டுகள் சுமார் 20 முதல் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க உதவும் தற்போது முதல்கட்டமாக வானில் இருந்து ஏவக்கூடிய டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை இந்த சுதேசி தாக்குதல் ஹெலிகாப்டர் பெறும் என கூறப்படுகிறது.
கூடவே 12 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பை கொண்ட SANT Standoff Anti Tank Missile மற்றும் 5 -8 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பை கொண்ட Helina ஹெலினா, Dhruvasthra த்ருவாஸ்திரா போன்ற டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் இணைக்கப்படும்.
இதை தவிர தற்போதுள்ள ஏவுகணைகளை விடவும் சுமார் மூன்று மடங்கு அதிக தொலைவு செல்லும் தொலைதூர துல்லிய தாக்குதல் குண்டு ஒன்று உருவாக்கப்பட்டு வருவது கூடுதல் தகவல் ஆகும்.