HAL மற்றும் TATA குழுமம் ஆகியவை இணைந்து புதிய ராணுவ போக்குவரத்து விமானத்தை தயாரிக்கலாம் !!

  • Tamil Defense
  • November 2, 2022
  • Comments Off on HAL மற்றும் TATA குழுமம் ஆகியவை இணைந்து புதிய ராணுவ போக்குவரத்து விமானத்தை தயாரிக்கலாம் !!

தற்போது TATA Group டாடா குழுமம் இந்திய விமானப்படைக்கான புதிய AIRBUS CASA C-295 ரக ராணுவ போக்குவரத்து விமானங்களை தயாரிக்கும் பணியை தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் துவங்க உள்ளது.

இவை இந்திய விமானப்படை பயன்படுத்தி வரும் அரதபழைய AVRO HS-748 ரக விமானங்களுக்கு மாற்றாக அமையும் அதே நேரத்தில் எதிர்காலத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய விமானங்களான ANTONOV AN-32 ரக விமானங்களுக்கும் மாற்றாக அமையும் என பரவலாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய விமானப்படையின் பிரமாண்ட ஆனால் பழைய போக்குவரத்து விமானங்களான சோவியத் காலகட்ட Ilyushin IL-76 மற்றும் அந்த ரகத்தை சேர்ந்த AWACS மற்றும் டேங்கர் விமானங்களை மாற்றுவதற்கான காலமும் நெருங்கி வருகிறது.

ஆகவே தற்போது உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான AIRBUS தொழில்நுட்ப உதவியை பெற உள்ள நாட்டின் புத்தம்புதிய விமான தயாரிப்பு நிறுவனமான TATA ,

நாட்டின் பழைய மற்றும் அனுபவம் வாய்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான HAL Hindustan Aeronautics Limited உடன் இணைந்து IL-76 மற்றும் எதிர்காலத்தில் C-17 போன்ற பிரமாண்ட போக்குவரத்து விமானங்களுக்கு மாற்றாக புதிய விமானத்தை தயாரிக்கலாம்.

இந்த புதிய விமானத்தை இந்திய விமானப்படை தனது போக்குவரத்து, எரிபொருள் டேங்கர், AWACS & AEWCS போன்ற கண்காணிப்பு விமானங்கள் என பல்வேறு வகைகளில் பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.