ராணுவத்திற்கான புதிய மின்சார வாகனம் அறிமுகம் !!

  • Tamil Defense
  • November 28, 2022
  • Comments Off on ராணுவத்திற்கான புதிய மின்சார வாகனம் அறிமுகம் !!

கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரை தளமாக கொண்ட Pravaig Dynamics ப்ரவைக் டைனமிக்ஸ் எனும் மின்சார வாகன நிறுவனமானது ராணுவத்திற்கான தனது புதிய மின்சார வாகனம் ஒன்றை சமீபத்தில் அறிமுகபடுத்தி உள்ளது.

இந்த வாகனத்திற்கு வீர் VEER என பெயரிடப்பட்டு உள்ளது, இது ஏற்கனவே இந்த நிறுவனம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தயாரித்த Defy டிஃபை எனும் SUV ரக வாகனத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது என கூறப்படுகிறது.

இந்த வீர் வாகனத்தில் ஒரு 90.2kWh திறன் பேட்டரி உள்ளது, இது நான்கு சக்கரங்களுக்கும் 402bhp குதிரைசக்தி மற்றும் 620nm திறனை அளிக்கும்மேலும் இது 4960 மில்லிமீட்டர் நீளம் கொண்டது மற்றும்,

தரைக்கும் வாகனத்திற்குமான இடைவெளி 234 மில்லிமீட்டர் எனவும், இந்த வாகனத்தில் உள்ள Fast Charging Technology எனும் தொழில்நுட்பம் காரணமாக வெறும் 30 நிமிடத்தில் சுமார் 80 சதவிகிதம் அளவுக்கு சார்ஜ் ஆகிவிடும் மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் தொடர்ந்து செல்லும் எனவும் கூறப்படுகிறது.

இதை தவிர இந்த Pravaig Dynamics நிறுவனமானது ராணுவ தேவைக்கென பிரத்தியேகமாக ஒரு High Mobility Multipurpose வாகனத்தை உருவாக்கியுள்ள நிலையில் தற்போது அது சோதனை கட்டத்தில் உள்ளதாகவும் விரைவில் இந்திய தரைப்படையின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்பது கூடுதல் சிறப்பாகும்.