ஐ நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் இங்கிலாந்து ஆதரவு !!
1 min read

ஐ நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் இங்கிலாந்து ஆதரவு !!

சில மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வோலோடிமீர் செலன்ஸ்கி வலியுறுத்தியதை அறிவோம்.

அதே போல அப்போது அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டன.

குறிப்பாக இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என அமெரிக்க அரசு வலியுறுத்தியது.

தற்போது அதே நிலைபாட்டை இங்கிலாந்து அரசும் எடுத்துள்ளது, மேலும் பாதுகாப்பு சபையின் நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் இங்கிலாந்து அரசு வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அரசின் சார்பாக இதனை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான இங்கிலாந்தின் நிரந்தர பிரதிநிதி பார்பரா வூட்வார்ட் தெரிவித்தார் தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஃபிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கொண்ட நாடுகள் என்பது கூடுதல் தகவல் ஆகும்.