ராணுவத்திற்கான மின்சார வாகனம் சோதனை விரைவில் படையில் இணைப்பு !!

  • Tamil Defense
  • November 17, 2022
  • Comments Off on ராணுவத்திற்கான மின்சார வாகனம் சோதனை விரைவில் படையில் இணைப்பு !!

பெங்களூர் நகரை தளமாக கொண்டு இயங்கி வரும் Pravaig Dynamics ப்ரவைக் டைனமிக்ஸ் எனும் தனியார் துறை நிறுவனம் இந்திய ராணுவத்திற்காக தான் தயாரித்த அதிநவீன மின்சார வாகனத்தின் சோதனைகளை தற்போது துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

பெங்களூர் விமான நிலையத்திற்கு அருகேயுள்ள பகுதியில் இந்த வாகனத்தின் சோதனைகள் நடைபெற்று வருகின்றன, இந்திய தரைப்படை அரசின் சுற்றுச்சூழல் கொள்கையை ஏற்று கொண்டு மின்சார வாகனங்களை வாங்கும் முடிவை சமீபத்தில் அறிவித்ததை அறிவோம்.

இந்த ப்ரவைக் மின்சார ராணுவ வாகனமானது சுமார் 423 கிலோமீட்டர் தொலைவு வரை பயணிக்கும், 30 நிமிடங்களில் சுமார் 80 சதவிகிதம் அளவுக்கு சார்ஜ் ஆகிவிடும் மேலும் 0-100 கிலோமீட்டர் வேகத்தை எட்ட வெறும் 5 நொடிகள் கூட தேவையில்லை என கூறப்படுகிறது.

அதே போல பொது மக்கள் பயன்பாட்டிற்கான ப்ரவைக் நிறுவனத்தின் SUV ரக வாகனம் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட உள்ளது இது 504 கிலோமீட்டர் தொலைவு வரை பயணிக்கும் மேலும் இதனுடைய உச்சகட்ட வேகம் மணிக்கு 200 கிலோமீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.