பாகிஸ்தானுக்கு தகவல்களை கசியவிட்ட வெளியுறவு துறை ஒட்டுநர் கைது !!

  • Tamil Defense
  • November 20, 2022
  • Comments Off on பாகிஸ்தானுக்கு தகவல்களை கசியவிட்ட வெளியுறவு துறை ஒட்டுநர் கைது !!

கடந்த வெள்ளிக்கிழமை அன்று தலைநகர் தில்லியில் இந்திய அரசின் வெளியுறவு துறையில் பணியாற்றி வரும் ஒட்டுநர் ஒருவர் முக்கிய தகவல்களை கசிய விட்டதற்காக கைது செய்யப்பட்டான்.

உளவுத்துறையினர் மேற்கண்ட நபர் பாகிஸ்தானுக்கு முக்கிய தகவல்களை கசிய விடுவதாக அளித்த தகவலை அடுத்து தில்லி காவல்துறை அதிகாரி அந்த நபரை கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கண்ட நபர் சமுக வலைதளத்தில் பெண் ஒருவரிடம் சிக்கியதையடுத்து மிரட்டப்பட்ட நிலையில் ரகசிய தகவல்களை அளிக்குமாறு பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.