மேலதிக அர்ஜுன் டாங்கிகளை வாங்குமாறு தரைப்படைக்கு கோரிக்கை விடுத்துள்ள DRDO !!

  • Tamil Defense
  • November 28, 2022
  • Comments Off on மேலதிக அர்ஜுன் டாங்கிகளை வாங்குமாறு தரைப்படைக்கு கோரிக்கை விடுத்துள்ள DRDO !!

DRDO Defence Research and Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது இந்திய தரைப்படையிடம் மேலும் அதிக அளவில் ARJUN அர்ஜுன் டாங்கிகளை வாங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த கோரிக்கையானது தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா உக்ரைன் போரில் ரஷ்ய டாங்கிகளின் மோசமான செயல்பாடு மற்றும் அதிநவீன மேற்கத்திய ஆயுதங்களுக்கு எதிரான குறைந்த அளவு பாதுகாப்பு உள்ளிட்டவை பரவலாக கவனிக்கப்பட்டு பேசப்படும் நிலையில் இந்திய தரைப்படைக்கு விடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு 124 அர்ஜுன் ARJUN MK1 டாங்கிகள் ஆர்டர் செய்யப்பட்டு அவற்றின் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது தான் 10 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜுன் டாங்கி தயாரிப்பு மையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

அதன்படி கடந்த ஆண்டு சுமார் 7523 கோடி ரூபாய் மதிப்பிலான 118 Arjun Mk1A ரக டாங்கிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் தற்போது சென்னை ஆவடியில் உள்ள HVF Heavy Vehicles Factory கனரக வாகன தொழிற்சாலை இவற்றை தயாரிக்கும் பணியில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

Indigenous FMBT Futuristic Main Battle Tank எனப்படும்
சுதேசி எதிர்கால பிரதான போர் டாங்கியை தயாரிக்கும் திட்டம் நிறைவேறி தயாரிப்பு நிலையை எட்டுவதற்கு இனியும் 10 ஆண்டுகள் தேவைப்படும் அதாவது 2032 ஆகலாம் ஆகவே அந்த திட்டத்திற்கு முன்னோடியான ARJUN MK1A ரக டாங்கிகளில் சுமார் 250 டாங்கிகளை வாங்குமாறு DRDO இந்திய தரைப்படைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.