தனியார் நிறுவனத்துடன் இணைந்து EXO SKELETON தயாரிக்கும் DRDO !!

  • Tamil Defense
  • November 15, 2022
  • Comments Off on தனியார் நிறுவனத்துடன் இணைந்து EXO SKELETON தயாரிக்கும் DRDO !!

நமது DRDO Defence Research & Development Organisation என அழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது ராணுவத்திற்கான EXO SKELETON அமைப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்காக தலைநகர் தில்லியை தளமாக கொண்டு இயங்கும் Timetooth Technologies Private Limited டைம்டூத் டெக்னாலஜிஸ் எனும் தனியார் துறை நிறுவனத்துடன் இணைந்து DRDO செயலாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த EXO SKELETON அமைப்பானது உடலக்கு வெளியே இருந்து வீரர்களின் திறனை பன்மடங்கு அதிகரிக்கும் அமைப்பாகும், இவை அதிக எடையை தூக்க அதிக கஷ்மில்லாமல் செயல்பட வீரர்களுக்கு பேரூதவியாக அமையும், இதன் மூலம் தண்டுவடம் சார்ந்த பிரச்சினைகளால் அதிகம் அவதிப்படும் ராணுவ வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம்.

இந்த அமைப்பு எடை குறைந்த பொருளால் தயாரிக்கப்படும் நன்கு உழைக்கும் பேட்டரி ஆகியவற்றை கொண்டிருக்கும், 100 கிலோ எடையை தூக்கவும் 8 மணி நேரம் வரை இயங்கவும் இந்த அமைப்பு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.