ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவு பகுதியில் விரைவில் ஏவுகணை சோதனை ஒன்று நடக்கவிருக்கும் நிலையில் சீன கண்காணிப்பு கப்பல் ஒன்று இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த கப்பல் ஏற்கனவே இலங்கை வந்த சீன கண்காணிப்பு கப்பலான Yuan Wang-5 யுவான் வாங்-5 கப்பலை விட சற்றே நவீனமானதாகும் இதன் பெயர் Yuan Wang-6 யுவான் வாங்-6 ஆகும், தற்போது இந்தோனேசியா நாட்டில் உள்ள லம்போக் ஜலசந்தி வழியாக நுழைந்துள்ளது இது அந்தமான் தீவில் இருந்து 3,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த கப்பல் சீனா இந்த மாதம் 12ஆம் தேதி மற்றும் மாத இறுதியில் நடத்த உள்ள செயற்கைகோள் ஏவுதல்களை கண்காணிக்கும் நோக்கத்தோடு இந்திய பெருங்கடல் பகுதியில் நான்காம் தேதியன்று நுழைந்துள்ளதாக கூறப்பட்டாலும் இந்திய கடற்படை தொடர்ந்து அந்த கப்பலை கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் விரைவில் அதாவது அடுத்த வாரம் நடைபெறவிருந்த அக்னி ரக கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத தாக்குதல் ஏவுகணை சோதனை தற்போது இந்த கப்பலின் வருகையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிப்பது குறிப்பிடதக்கது ஆகும்.