இந்திய பயணிகள் விமான சந்தையை குறிவைக்கும் பிரேசில் விமான நிறுவனம் !!
பிரேசில் நாட்டை சேர்ந்த உலக பிரசத்தி பெற்ற விமான தயாரிப்பு நிறுவனமான EMBRAER எம்ப்ரேர் இந்திய பயணிகள் விமான சந்தையை குறிவைத்து களமிறங்க திட்டமிட்டு உள்ளது.
அதாவது Turboprop எனப்படும் ஜெட் என்ஜின் அல்லாத விசிறிகளை கொண்ட என்ஜின் உடைய விமானங்களை களத்தில் இறக்க திட்டமிட்டு உள்ளது ஆனால் இந்திய சந்தையை பொருத்தவரையில் இத்தகைய விமான பிரிவில் ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த ATR நிறுவனம் கோலோச்சி வருகிறது.
தற்போது நான்கு இந்திய விமான நிறுவனங்கள் ATR நிறுவனத்தின் 61 டர்போப்ராப் ரக விமானங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றன, EMBRAER நிறுவனமானது தனது 70 மற்றும் 90 இருக்கைகளை கொண்ட டர்போப்ராப் விமானங்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு எம்ப்ரேர் நிறுவனமானது தனது டர்போப்ராப் ரக விமானங்களை அறிமுகபடுத்தியது, மற்ற நிறுவனங்களின் டர்போப்ராப் விமானங்களை போலில்லாமல் என்ஜின்கள் விமானத்தின் பின்புறம் இருக்கும், மேலும் 2040 வாக்கில் ஹைட்ரஜன் எரிபொருள் பயன்படுத்தும் என்ஜின்களாக மாற்றியமைக்கவும் திட்டமிட்டு உள்ளது கூடுதல் தகவல் ஆகும்.