இந்தியாவில் தயாரிப்பை துவங்க விரும்பும் உலகின் மிகப்பெரிய துப்பாக்கி தயாரிப்பு நிறுவனம் !!

  • Tamil Defense
  • November 16, 2022
  • Comments Off on இந்தியாவில் தயாரிப்பை துவங்க விரும்பும் உலகின் மிகப்பெரிய துப்பாக்கி தயாரிப்பு நிறுவனம் !!

பிரேசில் நாட்டை சேர்ந்த துப்பாக்கி தயாரிப்பு நிறுவனம் TAURUS ARMAS டாரஸ் அர்மாஸ் ஆகும், இந்த நிறுவனம் கைத்துப்பாக்கிகள், கார்பைன்கள், இலகுரக இயந்திர துப்பாக்கிகள் ஆகியவற்றை தயாரித்து வருகிறது தற்போது இந்த நிறுவனம் இந்திய சந்தையை குறிவைத்து உள்ளது.

இதற்காக இந்திய தனியார் துறை நிறுவனமான Jindal Defence ஜின்டால் டிஃபன்ஸ் உடன் கைகோர்த்து உள்ளது, இந்த நிறுவனம் JINDAL GROUP ஜின்டால் குழுமத்தின் ஒரு பிரிவாகும், டாரஸ் அர்மாஸ் மற்றும் ஜின்டால் டிஃபன்ஸ் ஆகியவை இதனையடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளன.

தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் இந்த ஆயுதங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும், இதற்காக ஹரியானா மாநிலத்தில் ஒரு தொழிற்சாலை நிறுவப்படும் அங்கு 9mm கைத்துப்பாக்கிகள், 5.56×45mm சண்டை துப்பாக்கிகள், 7.62 × 39mm சண்டை துப்பாக்கிகள், 9×19mm இலகுரக இயந்திர துப்பாக்கிகள் SMG,

இவை தவிர டாரஸ் நிறுவனம் தனது உலக புகழ்பெற்ற 7.65 காலிபர் திறன் கொண்ட கைத்துப்பாக்கி மற்றும் 32 காலிபர் திறன் கொண்ட ரிவால்வர் துப்பாக்கிகள் ஆகியவற்றையும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாரஸ் டிஃபன்ஸ் நிறுவனமானது உலகின் மிகப்பெரிய துப்பாக்கி தயாரிப்பு நிறுவனமாகும், குறிப்பாக இந்த நிறுவனத்தின் கைத்துப்பாக்கிகள் மற்றும் ரிவால்வர்கள் உலக தரம் வாய்ந்தவை மேலும் மிகவும் புகழ்பெற்றவை ஆகும், அமெரிக்காவில் இவை தான் அதிகம் இறக்குமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.