பலிஸ்டிக் ஏவுகணை தடுப்பு அமைப்பின் இரண்டாவது ஏவுகணை சோதனை !!

  • Tamil Defense
  • November 20, 2022
  • Comments Off on பலிஸ்டிக் ஏவுகணை தடுப்பு அமைப்பின் இரண்டாவது ஏவுகணை சோதனை !!

சில வாரங்கள் முன்னதாக இந்தியா தனது பலிஸ்டிக் ஏவுகணைகள் தடுப்பு அல்லது பாதுகாப்பு அமைப்பின் இரண்டாவது கட்டத்தை சேர்ந்த முதலாவது ஏவுகணையை மிகவும் வெற்றிகரமாக சோதனை செய்தது, இதில் பயன்படுத்தப்படும் ஏவுகணை AD – 1 என அழைக்கப்படுகிறது, இது 3000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது.

இந்த நிலையில் பலிஸ்டிக் ஏவுகணைகள் தடுப்பு அல்லது பாதுகாப்பு அமைப்பின் இரண்டாவது கட்டத்தின் இரண்டாவது ஏவுகணையின் சோதனைகள் நடைபெற உள்ளன, இதில் பயன்படுத்தப்படும் ஏவுகணைக்கு AD – 2 என பெயரிடப்பட்டுள்ளது, இதனால் 3000 – 5500 கிலோமீட்டர் தொலைவில் வரும் IRBM Intermediate Range Ballistic Missile இடைத்தூர பலிஸ்டிக் ஏவுகணைகளை தடுக்க முடியும்.

அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2024ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட உள்ளதாகவும் மேலும் 2025ஆம் ஆண்டு வாக்கில் AD – 1 மற்றும் AD -2 ஆகிய இரண்டு ஏவுகணைகளையும் அவற்றுடன் சேர்த்து 1500 கிலோமீட்டர் தூரம் வரை கண்காணிக்கும் புதிய அதிநவீன தொலைதூர ரேடாரையும் சோதனை செய்ய உள்ளதாக DRDO தலைவர் முனைவர் சமீர் காமத் தெரிவித்தார்.

இரண்டு ஏவுகணைகளும் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் IRBM மற்றும் MIRV திறன்களை கொண்ட ICBM ரக ஏவுகணைகளை தடுப்பதற்கு போதுமானவை ஆகும், அதேபோல் தற்போது பலிஸ்டிக் ஏவுகணை தடுப்பு அமைப்பின் முதல் கட்டமானது மேற்கத்திய எல்லையோரம் நிறுவப்பட்டு வருகிறது இவை தில்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.