இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஆர்வம் காட்டும் அர்மீனியா !!
ஏற்கனவே இந்தியாவிடம் இருந்து Pinaka பினாகா பல குழல் ராக்கெட் லாஞ்சர்கள், ATGM டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், Swathi WLR ஸ்வாதி ஆயுத கண்டுபிடிப்பு ரேடார்கள், குண்டுகள் போன்வற்றை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் 70க்கும் அதிகமான 155 மில்லிமீட்டர் மற்றும் 39 காலிபர் திறன் கொண்ட பிரங்கிகள் ஆகியவற்றை வாங்க அர்மீனியா ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்த நிலையில் தற்போது அர்மீனியா இந்திய தயாரிப்பு வான் பாதுகாப்பு அமைப்புகள் Air Defence System மீது ஆர்வம் காட்டி வருவதாகவும் இந்தியா அர்மீனியாவுக்கு விற்க முன்வந்த இரண்டு வான் பாதுகாப்பு அமைப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அர்மீனியா நடுத்தர தாக்குதல் வரம்பை கொண்ட வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க விரும்பும் நிலையில் இந்தியா தான் தயாரித்த Akash Mk-1 ஆகாஷ் மார்க்-1, Akash Mk-2 ஆகாஷ் மார்க்-2 மற்றும் Akash NG அடுத்த தலைமுறை ஆகாஷ் அமைப்புகளை விற்க முன்வந்துள்ளது இவற்றில் ஒன்று நிச்சயமாக தேர்வாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான அர்மீனியாவுக்கு அண்டை நாடான அஸர்பெய்ஜானுடன் மோதல் உள்ளது, அஸர்பெய்ஜான்- துருக்கி – பாகிஸ்தான் கூட்டணி காரணமாக அர்மீனியா பலத்த இழப்பை சந்தித்து உள்ளது, இஸ்ரேலும் அஸர்பெய்ஜானுக்கு உதவி வருகிறது,
இந்த நிலையில் தான் இந்தியா அர்மீனியாவுக்கு ஆதரவாக சர்வதேச அரங்கில் செயலாற்றி வருகிறது அதை போலவே அர்மீனியாவும் சர்வதேச அரங்கில் இந்தியாவை ஆதரித்து வருகிறது மேலும் கடந்த 2021 முதல் இந்தியாவிடம் இருந்து மீண்டும் மீண்டும் அர்மீனியா ஆயுதம் வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.