தேஜாஸ் விமானத்தை சோதனை செய்ய கோரிய அர்ஜென்டினா !!

  • Tamil Defense
  • November 29, 2022
  • Comments Off on தேஜாஸ் விமானத்தை சோதனை செய்ய கோரிய அர்ஜென்டினா !!

கடந்த மாதம் பெங்களூர் நகரத்தில் அமைந்துள்ள HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தை அர்ஜென்டினா அதிகாரிகள் குழு பார்வையிட்ட நிலையில் தற்போது அவர்கள் விமானிகளை கொண்டே நேரடியாக சோதனை செய்ய விரும்புவதாக கோரி உள்ளதாகவும்,

இந்த Hands On சோதனை அடுத்த ஆண்டு 2023ல் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, அர்ஜென்டினா இந்த சோதனைகளை நடத்தி தான் தனக்கு தேவையான போர் விமானத்தை இறுதி செய்து தேர்வு செய்ய உள்ளதாக இந்திய அரசின் பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அர்ஜென்டினா இதுவரை மூன்று நாடுகளின் போர் விமானங்கள் மீது ஆர்வம் காட்டி வருகிறது அவையாவன டென்மார்க் நாட்டின் உபயோகிக்கப்பட்ட F – 16, சீனாவின் JF – 17 கடைசியாக இந்தியாவின் LCA TEJAS ஆகியவை ஆகும்.

சீனாவின் JF – 17 போர் விமானத்தில் பெரும்பாலும் உபயோகிக்கப்படும் ரஷ்ய RD – 93 என்ஜினுக்கு மாறாக சீன தயாரிப்பு WS – 13 என்ஜின் உபயோகிக்கப்படும் என கூறப்படுகிறது மேலும் இதே போன்ற கோரிக்கையை சீனாவிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.