இந்திய தரைப்படைக்கு இந்திய தயாரிப்பு துப்பாக்கிகளை வழங்க முன்வந்துள்ள அரேபிய நிறுவனம் !!
1 min read

இந்திய தரைப்படைக்கு இந்திய தயாரிப்பு துப்பாக்கிகளை வழங்க முன்வந்துள்ள அரேபிய நிறுவனம் !!

ஐக்கிய அரபு அமீரக நாட்டை சேர்ந்த உலக புகழ்பெற்ற நிறுவனம் கராக்கல் ஆகும் இந்த நிறுவனமானது சமீபத்தில் இந்தியாவை சேர்ந்த ICOMM எனும் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே துப்பாக்கிகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவியது.

தற்போது இங்கு தனது துப்பாக்கிகளை தயாரிக்க உள்ளது, அவற்றில் 60% பாகங்கள் வரை இந்திய தயாரிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது, ஆகவே இந்திய முப்படைகளுக்கு இவற்றை விற்பது மேலும் எளிதாகும் என்றால் மிகையாகாது.

இதற்கு காரணம் தற்போது இந்திய அரசு மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை தாங்கள் வாங்கும் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் இந்திய தயாரிப்பு அல்லது குறைந்தபட்சம் முடிந்த அளவுக்கு இந்திய தயாரிப்பு பாகங்கள் இடம்பெற வேண்டும் எனவும் அத்தகைய தளவாடங்கள் இங்கு இல்லாதபட்சத்தில் மட்டுமே இறக்குமதி செய்ய வேண்டும் என கொள்கை வகுத்துள்ளது தான்.

தற்போது கராக்கல் CARACAL நிறுவனம் இந்திய முப்படைகளுக்கு தனது ஸ்னைப்பர் துப்பாக்கிகள் மற்றும் CQB Carbine ரக துப்பாக்கிகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளது, இதற்காக தனது CSR 338 ஸ்னைப்பர் துப்பாக்கி மற்றும் CAR816 கார்பைன் ஆகியவற்றை ஆஃபர் செய்துள்ளது.

இந்திய தரைப்படைக்கு 4 லட்சத்து 25 ஆயிரம் 5.56 மில்லிமீட்டர் CQB கார்பன் ரக துப்பாக்கிகளும், 4549 போல்ட் ஆக்ஷன் ஸ்னைப்பர் துப்பாக்கிகளும், இந்திய கடற்படைக்கு 88 மற்றும் இந்திய விமானப்படைக்கு 212 மேற்குறிப்பிட்ட அதே வகையிலான ஸ்னைப்பர் துப்பாக்கிகளும் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.