மற்றொரு நம்பி நாராயணன் கதை; இஸ்ரோ விஞ்ஞானிக்கு எதிராக நடக்கும் பெரும் சதி !!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ISRO இஸ்ரோவில் பணியாற்றி வரும் விஞ்ஞானி பிரவீன் மவுரியா ஆவார், இவர் சமுக வலைதளத்தில் தனக்கு எதிராக நடக்கும் மிகப்பெரிய சதி பற்றி பதிவிட்டுள்ளார்.

அதாவது தன்னை கேரள மாநிலத்தை சேர்ந்த அஜிகுமார் சுரேந்திரன் என்பவன் துபாயில் உள்ள வெளிநாட்டு உளவாளிகள் சிலரின் சொல்படி நடந்து ரகசிய தகவல்களை பரிமாறி கொண்டால் மிகப்பெரிய அளவில் பணம் தருவதாக கூறி தொடர்பு கொண்டதாகவும், தான் அதற்கு மறுப்பு தெரிவித்து இனி என்னை சந்திக்க வர வேண்டாம் என எச்சரிக்கை செய்து அனுப்பியதாகவும்

அதற்கு பின்னர் தான் பிரச்சினை தீவிரமடைந்தது எனவும் அதாவது அஜிகுமார் தனது மகளை கொண்டு காவல்நிலையத்தில் தன்மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் பொய் வழக்கு ஒன்றை காவல்துறை உதவியுடன் பதிவு செய்து கேரள காவல்துறை தன்னை கைது செய்து சிறையில் அடைத்து தன்னை கொடூரமாக தாக்கியதாகவும்

பின்னர் தனது கோரிக்கையை ஏற்று கொண்டால் வழக்கை வாபஸ் வாங்குவதாக அஜிகுமார் மிரட்டியதாகவும் இந்த சதியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் கேரள காவல்துறையினர் கூட்டாக சேர்ந்து செயல்படுவதாகவும்

விண்வெளி துறைக்கு கடிதம் எழுதிய நிலையில் அதனை அவர்கள் உதாசீனம் செய்து வருவதாகவும், உள்நாட்டு உளவுத்துறையான IB Intelligence Bureau விசாரணை நடத்த தயாராக இருந்தும் விண்வெளி துறை அனுமதி வழங்கவில்லை எனவும் இதற்கு காரணம் இஸ்ரோவில் உள்ள மிகப்பெரிய தேச விரோத கும்பல் எனவும்

இந்த கும்பலில் உள்ள முக்கிய மூத்த இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் முன்னாள் இஸ்ரோ தலைவரின் உறவினர் எனவும் தற்போது கேரளாவில் தனக்கு பெரும் ஆபத்து உள்ளதால் உத்தர பிரதேசத்தில் உள்ள சொந்த ஊரில் தங்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தற்போது இந்த விவகாரம் பற்றி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் தான் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் மற்றும் ஹைப்பர்சானிக் ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் Scramjet அமைப்பின் ஆய்வு திட்டம் ஆகியவற்றில் பணியாற்றியதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.