30 ஆண்டுகளுக்கு பிறகு ஃபிலிப்பைன்ஸில் அமெரிக்க ராணுவ தளம் சீனாவுக்கு செக் !!

  • Tamil Defense
  • November 30, 2022
  • Comments Off on 30 ஆண்டுகளுக்கு பிறகு ஃபிலிப்பைன்ஸில் அமெரிக்க ராணுவ தளம் சீனாவுக்கு செக் !!

இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சீனாவின் அராஜகம் காரணமாக சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ராணுவம் ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் ராணுவ தளம் அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய லூஸோன் பகுதியில் அமைந்துள்ள சூபிக் பே 1885 ஃபிலிப்பைன்ஸை காலனியாக வைத்திருந்த ஸ்பெயின் நாட்டின் கடற்படை தளமாகவும் துறைமுகமாகவும் கட்டமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது, பின்னர் 1898ஆம் ஆண்டு ஃபிலிப்பைன்ஸ் நாட்டை ஸ்பெயின் 20 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அமெரிக்காவுக்கு விற்றது அப்படி அமெரிக்காவின் காலனி நாடாக மாறியது, அதன் பிறகு 1901ஆம் ஆண்டு அன்றைய அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் ஒரு சிறப்பு உத்தரவை பிறப்பித்தார்.

அந்த உத்தரவின்படி ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் அமெரிக்க முதல் ராணுவ தளத்தை அமைத்தது, அதற்காக சூபிக் பே துறைமுகம் மற்றும் அதையொட்டிய சுமார் 2800 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ராணுவ தளம் அமைக்கப்பட்டது, இது ஆசியாவிலேயே மிகப்பெரிய அமெரிக்க ராணுவ தளமாகவும், அமெரிக்காவிற்கு வெளியே அமைந்த மிகப்பெரிய அமெரிக்க ராணுவ தளமாகவும் இருந்தது.

ஒரே நேரத்தில் 30 போர் கப்பல்கள் வரை நிறுத்த முடியும் அதிகபட்சமாக 47 போர் கப்பல்கள், போர் விமானங்கள், ஆயுத கிடங்குகள், எரிபொருள் கிடங்குகள், குண்டுவீச்சு பயிற்சி களங்கள், காலாட்படை பயிற்சி களங்கள், காட்டு பகுதி பயிற்சி களங்கள், 5800 வீரர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 6000 பேர் பணியாளர்கள் என ஒரு குட்டி நகரமாகவே இருந்தது.

பின்னர் 1946ஆம் ஆண்டீ ஃபிலிப்பைன்ஸ் சுதந்திர நாடானது இதன் பிறகு அமெரிக்க அரசு இந்த தளத்தை குத்தகை அடிப்படையில் செயல்படுத்தி வந்தது, ஒவ்வொரு ஆண்டும் ஃபிலிப்பைன்ஸ் அரசுக்கு குத்தகை பணம் கொடுத்து வந்த நிலையில் அமெரிக்க தளத்தை எதிர்த்து பொதுமக்கள் போராடி வந்தனர், இந்த நிலையில் 1988 முதல் 1992 வரையிலான காலகட்டத்தில் குத்தகை ஒப்பந்தம் தொடர்பாக இரு நாட்டு அரசுகள் இடையே பிரச்சினை ஏற்பட்டு 1992ஆம் ஆண்டு அமெரிக்க சூபிக் பே தளத்தை விட்டு வெளியேறியது, அதன்பிறகு வர்த்தக துறைமுகமாக இயங்கி வந்தது.

இந்த நிலையில் சீனாவின் அடாவடித்தனம் காரணமாக தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு சூபிக் பே துறைமுகத்தை அமெரிக்க கடற்படை பயன்படுத்த முடிவு செய்துள்ளது, ஆனால் இந்த முறை இந்த துறைமுகம் முன்பை போலவே முழுவதும் அமெரிக்க கட்டுபாட்டில் செல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.