ஈரானை நோக்கி போர் விமானங்கள் அனுப்பிய அமெரிக்கா !!

  • Tamil Defense
  • November 10, 2022
  • Comments Off on ஈரானை நோக்கி போர் விமானங்கள் அனுப்பிய அமெரிக்கா !!

அமெரிக்க விமானப்படை பெர்சிய வளைகுடா பகுதியில் உள்ள தனது போர் விமானங்களை ஈரானை நோக்கி ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனுப்பி வைத்துள்ளது.

அதாவது சவுதி அரேபியா நாட்டின் மீதீ ஈரான் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் வகுத்துள்ளதாக கிடைத்த உளவுத்துறை தகவல்களை அடுத்து அமெரிக்க விமானப்படை மேற்குறிப்பிட்ட நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சவுதி அரேபிய அரசு அமெரிக்காவிடம் ஈரான் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை ஏவி சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல் தெரிவித்ததாக Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தகவலையடுத்தே அமெரிக்கா அந்த பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தனது போர் விமானங்களை அனுப்பி கண்காணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.