
அமெரிக்காவின் போயிங் நிறுவனம் சமீபத்தில் தான் தயாரித்த F/A-18 Super Hornet பல திறன் கடற்படை போர் விமானங்களை இந்திய விமானப்படையின் போர் விமான தேர்வில் கலந்து கொள்ள வைத்து விற்பனை செய்ய தயாராக உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியில் போயிங் நிறுவன அதிகாரியிடம் இந்திய கடற்படைக்கு அளிக்கப்படும் F/A-18 போர் விமானங்களில் இந்திய ஆயுதங்களை இணைக்க சம்மதம் அளிக்கப்படுமா என கேட்கப்பட்ட கேள்விக்கு
அவர் ஆம் என பதில் அளித்தார், அந்த வகையில் இந்தியா தயாரிக்கும் Astra BVRAAM,NASM-MR, SAAW போன்ற ஆயுதங்கள் இணைக்கப்படும் கூடவே அமெரிக்க தயாரிப்பான பல்வேறு அதிநவீன ஆயுதங்களையும் அளிக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்திய கடற்படையின் Mig-29K ரக போர் விமானங்கள் தொடர்ந்து விபத்துகளை சந்திக்கும் நிலையில் புதிதாக சுமார் 27 போர் விமானங்களை வாங்க இந்திய கடற்படை டென்டர் வெளியிட்ட நிலையில் ஃபிரான்ஸ் நாட்டின் DASSAULT டஸ்ஸால்ட் மற்றும் அமெரிக்காவின் போயிங் ஆகியவை போட்டியில் உள்ளன, இதில் தற்போது போயிங் BOEING F/A – 18 SUPER HORNET தான் முன்னனியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.