
ADA – Aeronautical Development Agency வானூர்தி மேம்பாட்டு முகமையின ஐந்தாம் தலைமுறை AMCA ஆம்கா போர் விமான திட்டத்தின் இயக்குனராக உள்ள முனைவர் ஏ கே கோஷ் சமீபத்தில் News18 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் நமது சொந்த தயாரிப்பான AMCA ஆம்கா ஐந்தாம் தலைமுறை போர் விமானமானது அமெரிக்க Lockheed Martin F-35 Lightning 2 மற்றும் ரஷ்யாவின் Sukhoi Su-57 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களுக்கு இணையானதாக இருக்கும் என கூறினார்.
முனைவர் கோஷ் மேலும் பேசும்போது ஆம்கா ஐந்தாம் தலைமுறை போர் விமானத் திட்டத்திற்கு CCS – Cabinet Committee on Security பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டியின் ஒப்புதல் கிடைத்த மூன்றரை வருடங்களில் சோதனை விமானம் வெளிவரும் அடுத்த ஒரு வருடத்தில் பறக்கும் சோதனைகள் நடைபெறும் எனவும்
இந்த ஆண்டு இறுதிவாக்கில் ஆம்கா விமானத்திற்கான CDR Critical Design Review முக்கிய வடிவமைப்பு சீராய்வு நடைபெறும் அதை தொடர்ந்து 15,000 கோடி நிதியை பெறுவதற்காக CCS முன் இத்திட்டம் வைக்கப்படும் பின்னர் ஆம்கா மார்க்-2 விமானத்தின் என்ஜினுக்கான தனி நிதியுதவியும் கோரப்படும், இதன் என்ஜின் வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியோடு தயாரிக்கப்படும் அது 110Kn ஆற்றலை வெளிபடுத்தும் எனவும், மார்க்-2 விமானத்தின் பாகங்கள் 90% இந்திய தயாரிப்பாக இருக்கும் எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.