மேற்கு வங்க மாநிலத்தில் அல்-காய்தா பயங்கரவாதி கைது !!
கடந்த சனிக்கிழமை அன்று மேற்கு வங்க காவல்துறையின் சிறப்பு நடவடிக்கை பிரிவு அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதி ஒருவனை மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கைது செய்தனர்.
அவனது பெயர் மொனீருதீன் கான் ஆகும், தெற்கு – 24 பர்கானா மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவனுக்கு அல்-காய்தா அமைப்பின் இந்திய பிரிவு (AQIS – Al Qaeda Indian Subcontinent) மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த அன்சாரூல்லாஹ் வங்கதேச அணி (ABT- Ansarullah Bangladesh Team) ஆகிய இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது.
மேலும் இது மட்டுமின்றி இவன் பயங்கரவாத அமைப்புகள் ஆள் சேர்க்க உதவியுள்ளான், போலி அடையாள அட்டைகள் தயாரித்து கொடுப்பது மற்றும் பயங்கரவாதிகளுக்கு தேவையான சப்ளைகளை செய்து கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளான்.
ஆகவே கைது செய்யப்பட்ட அவனை கூடுதல் விசாரணைக்காக நவம்பர் 14 வரை காவல்துறை விசாரணை காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.