ஜம்மு காஷ்மீரில் மேற்கு வங்கத்தை சேர்ந்த அல்-காய்தா பயங்கரவாதி கைது !!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரம்பான் பகுதியில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அல்-காய்தா பயங்கரவாதி ஒருவரை கையெறி குண்டுடன் கைது செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மிகவும் நம்பத்தகுந்த ரகசிய தகவவ் கிடைத்ததன் பேரில் ரம்பான் பகுதி காவல்துறையினர் குறிப்பிட்ட பகுதியை சுற்று வளைத்து கைது செய்து சோதனை நடத்தினர் அப்போது ஒரு சீன தயாரிப்பு கையெறி குண்டு ஒன்றும் கைபற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதியின் பெயர் அமிரூதீன் கான் ஆகும் இவன் மேற்கு வங்க மாநிலம் மஷீதா ஹவோரா பகுதியை சேர்ந்த முஸ்தஃபா கான் என்பவருடைய மகன் ஆவான்.

இவன் மீது இந்திய ஆயுத சட்டம் பிரிவு-4, வெடிபொருள் சட்டம் பிரிவு-13 மற்றும் 20 மேலும் சட்டவிரோத செயல்கள் தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.