Hermes 450 , Hermes 900 தாக்குதல் ட்ரோன்களை இந்திய ராணுவத்திற்கு வழங்க தயாராக உள்ள அதானி குழுமம் !!

  • Tamil Defense
  • November 4, 2022
  • Comments Off on Hermes 450 , Hermes 900 தாக்குதல் ட்ரோன்களை இந்திய ராணுவத்திற்கு வழங்க தயாராக உள்ள அதானி குழுமம் !!

அதானி குழுமத்தின் ஒரு பிரிவான அதானி டிஃபன்ஸ் Adani Defence இஸ்ரேலின் Elbit Systems எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்திடம் இருந்து உரிமம் பெற்று இந்தியாவிலேயே ஹெர்மிஸ் Hermes-450 மற்றும் Hermes-900 ஆகிய அதிக சக்திவாய்ந்த பல திறன் தாக்குதல் ஆளில்லா விமானங்களை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது அதானி டிஃபன்ஸ் நிறுவனம் மேற்குறிப்பிட்ட இரண்டு வகை ஆளில்லா தாக்குதல் விமானங்களையும் சமீபத்தில் நடந்து முடிந்த பாதுகாப்பு கண்காட்சியின் போது இந்திய முப்படைகளுக்கு அளிக்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே ஹெர்மிஸ்-900 Hermes-900 ரக ஆளில்லா தாக்குதல் விமானத்தின் தயாரிப்பு பணிகளை அதானி டிஃபன்ஸ் ஏற்றுமதி சந்தையை குறிவைத்து துவங்கியுள்ள நிலையில் அதில் EO/IR, SAR/GMTI & MPR, COMINT/CMMJAM, ELINT, Laser, Hyper Spectral systems, Large Area Scanning Systems மற்றும் பல்வேறு வகையான தொழில்நுட்ப அமைப்புகளை இணைத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Hermes-450 ரக ஆளில்லா விமானம் 150 கிலோ எடையையும், Hermes-900 ரக ஆளில்லா விமானம் 350 கிலோ எடையையும் சுமக்கும் திறன் கொண்டவை ஆகும் மேலும் இரண்டுமே தொடர்ந்து 36 மணி நேரம் பறக்கும் திறன் கொண்டவையாகும், அதானி டிஃபன்ஸ் நிறுவனம் இவற்றில் சுதேசி தொழில்நுட்பத்தை அதிகபடுத்தும் நோக்கில் DRDO அமைப்புடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் ஏற்கனவே அதானி டிஃபன்ஸ் DRDO வடிவமைத்து உருவாக்கிய ULPGM – UAV Launched Precision Guided Munition அதாவது ஆளில்லா விமானங்களில் இருந்து ஏவக்கூடிய துல்லிய தாக்குதல் குண்டு 3-4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலையான மற்றும் நகரும் தரை இலக்குகளை தாக்க பயன்படும் ஏவுகணையை தயாரித்து வருகிறது.

மேற்குறிப்பிட்ட Hermes-450 மற்றும் Hermes-900 ஆகிய ஆளில்லா தாக்குதல் விமானங்களில் இந்த ULPGM மற்றும் இதர DRDO பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆளில்லா விமானங்களுக்கான குண்டுகளையும் இணைத்து பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.