
இந்திய தரைப்படை முதல்கட்டமாக சுமார் 375 சுதேசி இலகுரக கவச வாகனங்களை வாங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றின் எடை 4.5 டன்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும், 600 கிலோ எடையை சுமக்க வேண்டும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டவையாக இருக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இப்படி ஒட்டுமொத்தமாக இந்திய தரைப்படைக்கு சுமார் 3600 வெவ்வேறு 4×4 ரக கவச வாகனங்களை வாங்க உள்ளனர் ஆனால் இவற்றில் 4×4/6×6 கண்ணிவெடி பாதுகாப்பு வாகனங்கள் அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது.