Day: November 21, 2022

தனது தகவல் தொடர்பு நெட்வொர்க்கை மேம்படுத்தும் இந்திய விமானப்படை !!

November 21, 2022

தனது திறன்களை அதிகரிக்கும் விதமாக இந்திய விமானப்படை தன்னுடைய பல ஆண்டுகள் பழமையான AFNet – Air Force Network எனப்படும் விமானப்படை நெட்வொர்க்கை மேம்படுத்தும் திட்டத்தை துவங்கி உள்ளது, இந்த அமைப்பு தான் இந்திய விமானப்படையின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான முதுகெலும்பாகும். இந்திய விமானப்படைக்கு சொந்தமான இந்த அமைப்பானது உடனடியான தகவல் தொடர்பு வசதிக்காக தனது தரை வான் மற்றும் விண் சார்ந்த அனைத்து தகவல் தொடர்பு அமைப்புகளையும் ஒரே குடையின் கீழ் […]

Read More

சென்னை: டி90 T90 டாங்கிகளை மேம்படுத்த உள்ள இந்தியா !!

November 21, 2022

சென்னை ஆவடியில் உள்ள கனரக HVF Heavy Vehicles Factory அதாவது கனரக வாகன தொழிற்சாலையில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய முதல் தொகுதி டி90 T90 டாங்கிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் மேற்குறிப்பிட்ட டாங்கிகளில் உள்ள ATT – Automatic Target Tracker எனப்படும் தானாகவே இலக்குகளை அடையாளம் காணும் கருவி, Digital Ballistic Computer மற்றும் APU Auxiliary Power Unit எனப்படும் துணை மின்சக்தி […]

Read More

விரைவில் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் சென்னை நிறுவனம் !!

November 21, 2022

சமீபத்தில் Skyroot Aerospace ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் எனும் நிறுவனம் தன்னுடைய Vikram – S விக்ரம் எஸ் எனும் நாட்டின் முதல் தனியார் ராக்கெட்டை ISRO எனும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியோடு வெற்றிகரமாக ஏவி புதிய வரலாற்றை உருவாக்கியது. இதனை தொடர்ந்து சென்னையை தளமாக கொண்ட Agnikul Cosmos அக்னிகுல் காஸ்மோஸ் எனும் சென்னை ஐஐடியால் உருவாக்கப்பட்ட தனியார் துறை நிறுவனம் நாட்டின் முதலாவது தனியார் ராக்கெட் ஏவுதளத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி […]

Read More

இந்திய அமெரிக்காவுக்கு எதிராக சைபர் ராணுவம் அமைக்க பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி !!

November 21, 2022

பாகிஸ்தான் அமெரிக்கா மற்றும் இந்தியாவை எதிர்க்க ஒரு சைபர் கட்டமைப்பை உருவாக்க துருக்கி உதவியதாக கிரேக்க நாட்டை சேர்ந்த Greekcitytimes எனும் நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி பாகிஸ்தானுக்கு துருக்கி உள்துறை அமைச்சர் சுலேமான் சோலு இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த சென்றார் அங்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷெஹ்ரிர் கான் அஃப்ரிடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த இருதரப்பு முடிவடைந்த பிறகு பாக் உள்துறை அமைச்சர் அஃப்ரிடி துருக்கி […]

Read More

துருக்கி பாகிஸ்தான் அஸர்பெய்ஜான் Vs இந்தியா ஈரான் அர்மீனியா !!

November 21, 2022

துருக்கி பாகிஸ்தான் மற்றும் அஸர்பெய்ஜான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒத்துழைப்பு இந்தியா ஈரான் மற்றும் அர்மீனியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறது என்றால் மிகையல்ல. துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்கனவே நல்ல உறவுகள் நீடித்து வந்த நிலையில் இரு நாடுகளுக்கும் அஸர்பெய்ஜான் உடன் நல்ல உறவு இருந்தது தற்போது மூன்று நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன, இந்த நெருக்கம் காரணமாக இந்தியா ஈரான் மற்றும் அர்மீனியா இடையேயான நெருக்கம் அதிகரித்துள்ளது. இந்தியா ஈரான் […]

Read More