Day: November 4, 2022

120 மிதவை குண்டுகள் மற்றும் 10 இலக்கு அறிதல் அமைப்புகளை வாங்கும் பணிகளை துவங்கிய இந்திய தரைப்படை !!

November 4, 2022

இந்திய தரைப்படை தற்போது 120 மிதவை குண்டுகள் மற்றும் வானில் இருந்து இலக்குகளை அடையாளம் காணும் 10 Aerial Targeting Systems ஆகியவற்றை சீன எல்லையோரம் தனது பலத்தை அதிகரிக்கும் விதமாக வாங்கும் பணிகளை துவங்கி உள்ளது. போர்க்கால அடிப்படையில் இந்தியாவிலேயே தயானிக்கப்பட்ட இத்தகைய அமைப்புகளை வாங்க உள்ளதாகவும், நவம்பர் 14ஆம் தேதி இவற்றிற்கான “விருப்பங்களை வரவேற்கும் கோரிக்கை” வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதே போல் Aerial Targeting Systems போன்ற அமைப்புகள் சுமார் 100 […]

Read More

Hermes 450 , Hermes 900 தாக்குதல் ட்ரோன்களை இந்திய ராணுவத்திற்கு வழங்க தயாராக உள்ள அதானி குழுமம் !!

November 4, 2022

அதானி குழுமத்தின் ஒரு பிரிவான அதானி டிஃபன்ஸ் Adani Defence இஸ்ரேலின் Elbit Systems எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்திடம் இருந்து உரிமம் பெற்று இந்தியாவிலேயே ஹெர்மிஸ் Hermes-450 மற்றும் Hermes-900 ஆகிய அதிக சக்திவாய்ந்த பல திறன் தாக்குதல் ஆளில்லா விமானங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அதானி டிஃபன்ஸ் நிறுவனம் மேற்குறிப்பிட்ட இரண்டு வகை ஆளில்லா தாக்குதல் விமானங்களையும் சமீபத்தில் நடந்து முடிந்த பாதுகாப்பு கண்காட்சியின் போது இந்திய முப்படைகளுக்கு அளிக்க தயாராக உள்ளதாக […]

Read More

புல்வாமா தாக்குதலை திட்டமிட்டவர் அடுத்த பாக் ராணுவ தளபதியாகும் வாய்ப்பு அதிகரிப்பு !!

November 4, 2022

தற்போது பாகிஸ்தான் தரைப்படையின் Quarter Master General ஆக பணியாற்றி வருபவர் லெஃப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் ஆவார் இவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI Inter Services Intelligence அமைப்பின் இயக்குனராக பணியாற்றியவர் அந்த காலகட்டத்தில் தான் புல்வாமா தாக்குதல் நடைபெற்றது. தற்போது பாகிஸ்தான் தரைப்படையின் அடுத்த தளபதிக்கான தேர்வில் இவர் தான் முன்னனியில் உள்ளார், Frontier Force Regiment அதிகாரியான இவர் பாகிஸ்தான் தரைப்படையின் 30ஆவது கோர், தரைப்படை உளவுப்பிரிவு Military Intelligence, வடக்கு […]

Read More

தப்பிக்கும் இருக்கைகளை வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இந்தியா திட்டம் !!

November 4, 2022

இந்தியாவின் HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் போர் விமானங்களுக்கான தப்பிக்கும் இருக்கைகளை தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த இருக்கைகள் மூலமாக வெவிநாட்டு இறக்குமதி குறையும் மேலும் இந்தியா வருங்காலத்தில் தயாரிக்கும் போர் விமானங்களில் இவற்றை பயன்படுத்தி கொள்ளவும் அதன்மூலம் சுதேசிமயமாக்கலை அதிகப்படுத்தவும், முழு வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு உரிமம் பெறவும் திட்டமிட்டு உள்ளனர் இதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்தியா பிரிட்டிஷ் நிறுவனமான […]

Read More

மிதவை குண்டுகளை ஏவும் வாகனங்கள் வாங்க டென்டர் வெளியிட்ட இந்திய தரைப்படை !!

November 4, 2022

இந்திய தரைப்படை சுமார் 100 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் மிதவை குண்டுகளை ஏவுக்கூடிய ஏவு வாகனங்களை வாங்குவதற்காக டென்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது, இதில் மேற்குறிப்பிட்ட ஏவும் அமைப்பு 7.5 டன்கள் எடைக்கு மிகாமல் இருக்கும் 4×4 வாகனம் குறிப்பாக அஷோக் லேலண்ட் ஸ்டால்லியன் Ashok Leyland Stallion வாகனத்தில் பொருத்தும் வகையில் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 12 மிதவை குண்டுகளை ஏவும் திறன் இருக்க வேண்டும், முதல்கட்டமாக இத்தகைய 10 வாகனங்களை வாங்க […]

Read More

இந்தோனேசிய கடற்படைக்கு கனரக துப்பாக்கி தயாரிக்கும் ஒப்பந்தம் பெற்ற இந்தியா !!

November 4, 2022

இந்திய தனியார் துறை நிறுவனமான Larsen & Toubro லார்சன் மற்றும் டூப்ரோ இந்தோனேசிய கடற்படைக்கு 40 மில்லிமீட்டர் அளவு கொண்ட கனரக துப்பாக்கி தயாரித்து கொடுக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இந்த கனரக துப்பாக்கிகளை இந்தோனேசிய கடற்படையின் Teluk Bintuni டெலுக் பின்டுனி ரக நிலநீர் போர்முறை கப்பல்களில் பயன்படுத்த உள்ளனர், இதற்காக சுதர்ஷன் Sudarshan CIWS Close In Weapons Systemஐ அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட TEEVRA தீவ்ரா 40mm துப்பாக்கிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த […]

Read More

சீன கடற்படை கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கும் இலங்கை டேங்கர் கப்பல்கள்; இந்தியா கவலை !!

November 4, 2022

சமீபத்தில் இலங்கை நாட்டின் எண்ணெய் டேங்கர் கப்பல்கள் ஆழ்கடல் சென்று சீன கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பி வருவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இலங்கை டேங்கர் கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருளை நிரப்பி கொண்டு ஆழ்கடல் சென்று அங்கு காத்திருக்கும் சீன கடற்படையின் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பி வருகின்றன. இந்த விவகாரம் தற்போது இந்தியாவின் கவனத்திற்கு வந்துள்ள நிலையில் இதுகுறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது அதே போல் அமெரிக்காவும் கவலை தெரிவித்து […]

Read More