இந்தியாவில் விரைவில் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய பிரங்கி தொழிற்சாலை !!

இந்திய தனியார் துறை நிறுவனமான Kalyani Group கல்யாணி குழுமம் விரைவில் இந்தியாவில் உலகின் மிகப்பெரிய பிரங்கி தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு உள்ளதாக பாதுகாப்பு கண்காட்சியில் கல்யாணி குழுமத்தின் தலைவர் பாபா கல்யாணி தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும்போது பிரதான முதலீடுகள் செய்துள்ளதாகவும் இனியும் அதனை அதிபடுத்த உள்ளதாகவும் பாபா கல்யாணி தெரிவித்தார்.

மேலும் இதன்மூலம் கல்யாணி குழுமத்தின் தயாரிப்பு திறன் ஐந்து மடங்கு அதிகரிக்கும் எனவும் ஒரு நாளைக்கு ஒரு பிரங்கி என்ற அளவில் தயாரிப்பு நடைபெறும் தற்போது 30 நாளைக்கு ஒரு பிரங்கி வீதம் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான கல்யாணி குழுமம் பாரத்-52, பாரத்-45, கருடா-105 & ATAGS போன்ற பிரங்கிகளை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.