கிழக்கு உக்ரைனில் ரஷ்ய கட்டுபாட்டில் உள்ள பகுதிகளை கைபற்றுவோம் சூளுரைத்த உக்ரைன் அதிபர் !!
1 min read

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய கட்டுபாட்டில் உள்ள பகுதிகளை கைபற்றுவோம் சூளுரைத்த உக்ரைன் அதிபர் !!

உக்ரைன் அதிபர் வோலோடீமீர் செலன்ஸ்கி ரஷ்ய படைகளின் கட்டுபாட்டில் உள்ள கிழக்கு உக்ரைனிய பகுதிகளை உக்ரைன் படைகள் விரைவில் மீட்டெடுக்க போவதாக சூளுரைத்து உள்ளார்.

நாட்டு மக்களுக்கு அக்டோபர் 1 மாலை அளித்த உரையின் போது இந்த வாரம் முழுவதும் ரஷ்யாவின் கட்டுபாட்டில் உள்ள டான்பாஸ் பகுதியில் பல இடங்களில் உக்ரைனிய தேசிய கொடியை நமது படையினர் ஏற்றியுள்ளனர், அடுத்த வாரத்தில் இனியும் அதிக இடங்களில் கொடிகளை ஏற்றுவோம்,

மேலும் அவர் உரையின் போது ரஷ்ய வீரர்களை நோக்கி இந்த போருக்கு உத்தரவிட்ட விளாடிமீர் புடின் அதிகாரத்தில் இருக்கும் வரையிலும், அதற்கு நீங்கள் தீர்வு காணாத வரையிலும் ஒவ்வொருவரும் கொல்லப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கிழக்கு உக்ரைனில் உள்ள முக்கிய நகரமான லைமனை நோக்கி முன்னேறி வருவதாக செய்தி வெளியிட்ட பிறகு உக்ரைன் அதிபர் மேற்குறிப்பிட்ட உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.