
நமது நாட்டின் முதன்மை பாதுகாப்பு ஆய்வு அமைப்பான DRDO Defence Research & Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு காந்திநகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு கண்காட்சியில் தனது பல்வேறு தயாரிப்புகளை காட்சிபடுத்தியுள்ளது.
அந்த வகையில் DRDO வின் ஒரு பிரிவான LRDE Electronics & Radar Development Eastablishment அதாவது மின்னனு மற்றும் ரேடார் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய உத்தம் ஏசா மார்க்-2 Uttam AESA MK2 ரேடார் இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முந்தைய உத்தம் ரேடார்களை விடவும் சுமார் 780 TR module அமைப்புகள் கூடுதலாக உள்ளன அதாவது சுமார் 912 TR module அமைப்புகள் இந்த உத்தம் மார்க்-2 ரேடாரில் உள்ளன என கூறப்படுகிறது.
இந்த உத்தம் மார்க்-2 ஏசா ரேடாரை தாக்குதல் கட்டுபாட்டு ரேடாராக தேஜாஸ் மார்க்-2 Tejas MK2 மற்றும் இந்திய கடற்படையின் Mig-29K மிக்-29 கே ரக போர் விமானங்களில் பயன்படுத்த உள்ளனர்.
மேலும் DRDO இந்த ரேடார் சுழன்று இயங்கும் அமைப்பு ஒன்றை உருவாக்க உள்ளது அதன் மூலம் பார்வைக்கு அப்பால் உள்ள இலக்குளை நோக்கி ஏவுகணைகளை ஏவி விட்டு 90 டிகிரி கோணத்தில் விமானத்தை வேறு திசையில் செலுத்திய பிறகும் பறந்து கொண்டிருக்கும் ஏவுகணைக்கு வழிகாட்ட முடியும்.
இந்த உத்தம் மார்க்-2 ஏசா ரேடாரானது அது பொருத்தப்பட்டிருக்கும் போர் விமானத்திற்கு சுமார் 140 டிகிர கோணத்தில் தேடுதல் திறனையும் 200 டிகிரி கோணத்தில் கண்காணிப்பு திறனையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.