ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்த இந்திய நிறுவனம் மீது தடை விதித்த அமெரிக்கா !!

  • Tamil Defense
  • October 1, 2022
  • Comments Off on ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்த இந்திய நிறுவனம் மீது தடை விதித்த அமெரிக்கா !!

மும்பை நகரை தளமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனமான Tibalaji Petrochem Private Limited நிறுவனம் ஈரானில் இருந்து மெத்தனால் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களை ஈரானில் இருந்து வாங்கி சீனாவில் விற்பனை செய்த காரணத்தாலும்,

ஏற்கனவே அமெரிக்காவின் தடை பட்டியலில் உள்ள Triliance, Iran Petrochemical Brokerage Firm, Iran Chemical Industries Investment Company மற்றும் Middle East Kimiya Pars Company ஆகியவற்றுடனும் இணைந்து வர்த்தக செயல்பாடுகளை மேற்கொண்ட காரணத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அரசின் கருவூல அதிகாரியின் கீழ் இயங்கும் வெளிநாட்டு சொத்துக்கள் கட்டுபாட்டு பிரிவு எடுத்துள்ள இந்த நடவடிக்கையில் இந்தியா, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், பனாமா ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் மீது JCPOA சட்டத்தின் கீழ் தடை விதித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை பற்றி Tibalaji Petrochem Private Limited நிறுவனமோ அல்லது இந்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சகமோ இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.