உக்ரைனுடைய ஒவ்வொரு அடியையும் பாதுகாப்போம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் !!

  • Tamil Defense
  • October 2, 2022
  • Comments Off on உக்ரைனுடைய ஒவ்வொரு அடியையும் பாதுகாப்போம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் !!

நேற்று ரஷ்யா உக்ரைனுடைய பதினைந்து சதவிகித பகுதிகளை தன்னுடன் இணைத்து கொண்ட நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவோ அல்லது நேட்டோவோ ரஷ்ய அதிபர் புடினை கண்டு அச்சமில்லை என கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசும்போது உக்ரைனுடைய ஒவ்வொரு அடி நிலப்பரப்பையும் மேற்குலக நாடுகள் பாதுகாக்கும் , புடினுடைய பொறுப்பற்ற அர்த்தமில்லாத பேச்சுக்கள் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளை அச்சப்படுத்தாது என கூறினார்.

மேலும் பேசும் போது நேட்டோ நாடுகளின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால் ஒவ்வொரு அடி நேட்டோ நிலப்பரப்பையும் பாதுகாக்க அமெரிக்கா முழு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்ய அதிபர் புடினை நோக்கி எச்சரிக்கை விடுத்தார்.