வடகொரிய ஏவுகணை சோதனையை தொடர்ந்து கூட்டு பயிற்சி மேற்கொண்ட அமெரிக்க ஜப்பானிய படைகள் !!

  • Tamil Defense
  • October 5, 2022
  • Comments Off on வடகொரிய ஏவுகணை சோதனையை தொடர்ந்து கூட்டு பயிற்சி மேற்கொண்ட அமெரிக்க ஜப்பானிய படைகள் !!

சமீபத்தில் வடகொரியா நீண்ட தூரம் செல்லும் பலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்தது, அந்த ஏவுகணை ஜப்பானுக்கு மேல் பறந்து சென்று பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் விழுந்தது, வடகொரியாவின் இந்த செயல் மிகப்பெரிய அளவில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வை தொடர்ந்து 4ஆம் தேதி ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கியூஷூ மாகாணத்தில் அமைந்துள்ள விமானப்படை தளத்தில் ஜப்பானிய மற்றும் அமெரிக்க மரைன் படைகள் கூட்டு பயிற்சி மேற்கொண்டு உள்ளன.

அந்த வகையில் எட்டு ஜப்பானிய போர் விமானங்களும், நான்கு அமெரிக்க போர் விமானங்ஙளும் இந்த கூட்டு பயிற்சிகளில் கலந்து கொண்டு உள்ளதாக ஜப்பானிய முப்படைகள் தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அமெரிக்க ஜப்பான் கூட்டு போர் பயிற்சிகள், அமெரிக்க தென்கொரிய கடற்படைகள் 5 ஆண்டுகளில் முதல்முறையாக நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சிகளை மேற்கொண்ட சில நாட்களில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.