அமெரிக்க தொழில்நுட்பங்களை ரஷ்யாவுக்கு கடத்திய கும்பல் சிக்கியது !!

  • Tamil Defense
  • October 21, 2022
  • Comments Off on அமெரிக்க தொழில்நுட்பங்களை ரஷ்யாவுக்கு கடத்திய கும்பல் சிக்கியது !!

தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் போரில் கைபற்றப்பட்ட ரஷ்ய ஆயுத தளவாடங்களில் பல்வேறு அமெரிக்க தொழில்நுட்ப அமைப்புகள் இருப்பது தெரிய வந்த நிலையில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அதை தொடர்ந்து அமெரிக்கா விசாரணை நடத்தியது.

இதில் 5 ரஷ்யர்கள் தவிர 4 லாத்வியா நாட்டவர்கள் மற்றும் 1 உக்ரைனியர் சிக்கியுள்ளனர் இவர்கள் ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள போலி நிறுவனங்கள் மூலமாக இந்த பொருட்களை வாங்கி பின்னர் ரஷ்யாவுக்கு அனுப்பியது தெரிய வந்தது.

அந்த வகையில் பல்வேறு அதிநவீன சிப்கள், அதிநவீன செமி கண்டக்டர் அமைப்புகள், இவற்றை ரஷ்ய போர் விமானங்கள் ஏவுகணைகள், அதிநவீன குண்டுகள், செயற்கைகோள்களில் பயன்படுத்தலாம் இவற்றை ரஷ்ய குழுவினர் கடத்தியுள்ளனர்.

ரஷ்யர்கள் அல்லாத இரண்டாவது குழுவினர் இண்டஸ்ட்ரியல் கிரைண்டர் எனப்படும் அமைப்பை ஜரோப்பாவுக்கு வாங்கி அங்கிருந்து ரஷ்யாவுக்கு கடத்த முயன்றுள்ளனர் இது லாத்வியா அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளது, இந்த அமைப்பை அணு ஆயுத திட்டத்தில் பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பொருட்களை வாங்கி விட்டு அதற்கான பண பரிமாற்றங்களை க்ரிப்டோ கரன்சி, போலி நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வங்கி ஒன்றின் மூலமாகவும் மேற்கொண்டு உள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து இவர்கள் அனைவரையும் கைது செய்து அமெரிக்கா கொண்டு வந்து விசாரணை செய்ய அமெரிக்க அரசு விரும்பி பல்வேறு நடவடிக்கைகளை இவர்கள் மீது எடுத்து வருவது கூடுதல் தகவல் ஆகும்.