ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க படைகள் எதற்கும் தயார் அமெரிக்க அரசு !!
1 min read

ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க படைகள் எதற்கும் தயார் அமெரிக்க அரசு !!

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் திங்கட்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவரிடம் ரஷ்யா உக்ரைனில் கைபற்றிய பகுதிகள் பற்றிய அமெரிக்க அரசின் பார்வை பற்றியும் அமெரிக்காவின் நடவடிக்கை பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் அமெரிக்கா ரஷ்யாவின் நடவடிக்கையை சட்ட விரோதமாக பார்ப்பதாகவும், ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க படைகள் எதையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

மேலும் ஐரோப்பாவை நோக்கி ஏற்கனவே நேட்டோ படைகளை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு அமெரிக்க படையணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.