சீனாவுக்காக பணியாற்றிய அமெரிக்க கடற்படை போர் விமானி கைது !!

  • Tamil Defense
  • October 29, 2022
  • Comments Off on சீனாவுக்காக பணியாற்றிய அமெரிக்க கடற்படை போர் விமானி கைது !!

சமீபத்தில் சீனா இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளின் விமானப்படை மற்றும் கடற்படை போர் விமானிகளை நல்ல சம்பளம் கொடுத்து பணிக்கு அமர்த்தி தனது கடற்படை மற்றும் விமானப்படை போர் விமானிகளை பயிற்றுவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

தற்போது அந்த வரிசையில் ஒரு முன்னாள் அமெரிக்க கடற்படையின் போர் விமானி மற்றும் பயிற்றுனருமான ஒருவரும் சீனாவில் பணியாற்றி வந்தது தெரிய வந்துள்ளது தொடர்ந்து அவரை ஆஸ்திரேலிய அதிகாரிகள் இதற்காக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேனியல் எட்மன்ட் டக்கன் எனும் அந்த 54 வயது முன்னாள் அமெரிக்க மரைன் படை விமானியை கடந்த 21 ஆம் தேதி ஆஸ்திரேலிய காவல்துறையினர் நகயூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஆரஞ்ச் எனும் சிற்றூரில் கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கை அமெரிக்க அரசு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ள நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கையை தடுக்க அமெரிக்கா தலைமையில் மேற்குலக நாடுகள் ஒன்றிணைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் அதாவது 60 நாட்களுக்குள் அமெரிக்க அரசு டேனியல் எட்மன்ட் டக்கனை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தற்போது இவருக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி நிதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர் அமெரிக்க மரைன் படையில் 1989-2002 வரை பணியாற்றி உள்ளார், மேஜர் அந்தஸ்து அதிகாரியான இவர் AV-8B Harrier II ரக போர் விமானங்களை இயக்கி வந்தார் 2014ஆம் ஆண்டு சீன தலைநகர் பெய்ஜிங் நகருக்கு குடிபெயர்ந்த அவர் AVIBIZ எனும் சீன நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது
சீன கடற்படையின் போர் விமானிகளுக்கு பயிற்சி அளித்து வந்தது கூடுதல் தகவல் ஆகும்.