இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க கடற்படைகள் செங்கடலில் உள்ள Gulf of Aqaba பகுதியில் இணைந்து நடத்திய நான்கு நாட்கள் கூட்டு பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன.
Digital Shield என பெயரிடப்பட்ட இந்த கூட்டு பயிற்சியின் போது அமெரிக்க கடற்படையின் ஐந்தாம் படைப்பிரிவின் 59ஆவது படையணியுடைய Devilray – T38 மற்றும் Saildrone Explorer ஆகிய இரண்டு ஆளில்லா தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டன.
இவை இரண்டுமே ஆளில்லா செயற்கை அறிவாற்றல் கொண்ட தளவாடங்களாகும் இஸ்ரேலிய கடற்படையின் 915 படையணி மற்றும் ஸ்நாபிர் படையணி ஆகியவற்றுடன் இணைந்து இயங்கின.
இரு நாட்டு கடற்படை அதிகாரிகளும் இது குறித்து பேசுகையில் இந்த கூட்டு பயிற்சி மூலமாக ஆளில்லா செயற்கை அறிவாற்றல் உள்ள தளவாடங்களை இணைந்து பயன்படுத்துவது எளிதாகும் என தெரிவித்தனர்.