தெற்கில் ரஷ்ய படைகளை வீழ்த்திவிட்டு கிழக்கிலும் முன்னேறும் உக்ரைன் படைகள் !!
உக்ரைனிய படைகள் தங்கள் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ரஷ்ய படைகளை வீழ்த்திய கையோடு தற்போது கிழக்கு உக்ரைனிலும் வேகமாக முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.
போர் துவங்கிய பிறகு முதல்முறையாக தெற்கு உக்ரைனில் பாயும் டினிப்ரோ ஆற்றின் கரையோரம் உள்ள பல முக்கிய சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களை உக்ரைன் படைகள் கைபற்றி உள்ளதாக உக்ரைன் அதிகாரிகளும் அங்குள்ள ரஷ்ய ஆதரவு அதிகாரிகளும் தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் மறுபக்கம் கிழக்கு உக்ரைனிலும் உக்ரைனிய படைகள் அதிவேகமாக முன்னேறி வருகின்றனர், லைமன் கெர்சோன் கார்கிவ் போன்ற முக்கிய பகுதிகளில் பல இடங்களை உக்ரைனியர்கள் மீண்டும் கைபற்றி உள்ளனர்.
பல முக்கிய இடங்களை கைபற்றிய நிலையில் இன்னும் பல இடங்களை ரஷ்யர்களின் பிடியில் இருந்து விடுவிக்க உக்ரைனிய படைகள் தீவிரமாக சண்டையில் ஈடுபட்டு வருவதாக உக்ரைனிய அதிபர் வோலோடீமீர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.