உக்ரைன் அதிபர் வோலோடீமீர் செலன்ஸ்கி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சமீபத்தில் தொலைபேசி மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது இருவரும் பல முக்கிய விஷயங்களை குறித்து கலந்தாலோசித்தனர்.
உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தை மற்றும் சுமுகமான தீர்வை எதிர்நோக்கி இருப்பதாகவும் ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அமைதி காண விரும்பவில்லை எனவும்
சமீபத்தில் கூட ஒருதலைபட்சமாக போலியாக பொது வாக்கெடுப்பு நடத்தி உக்ரைனுடைய 15 சதவிகித பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ததையும் உக்ரைன் ஒருபோதும் ஏற்று கொள்ளாது எனவும்
உக்ரைனுக்கு பல்வேறு மனிதாபிமான உதவிகளை செய்த இந்திய அரசு மற்றும் இந்திய தனியார் துறை நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவித்த கையோடு
போரை நிறுத்தவும் அமைதி காணவும் வலியுறுத்தும் வகையில் தற்போது போர் அவசியமற்றது என்பதை வலியுறுத்தி பேசிய இந்திய பிரதமர் மோடிக்கும் அவர் நன்றி தெரிவித்தார்
மேலும் உக்ரைன் அதிபர் வோலோடீமீர் செலன்ஸ்கி இந்திய பிரதமர் நரேந்திர மோடியை உக்ரைன் வருமாறும் அழைப்பு விடுத்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர இரு தலைவர்களும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயல்படுவது, உக்ரைன் இந்தியா ஆகியவை முக்கியமான விவசாய உற்பத்தி நாடுகள் ஆகையால் சர்வதேச உணவு பாதுகாப்பு பற்றியும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.