ரஷ்ய விமானப்படை தளம் மீது தற்கொலை தாக்குதல் ட்ரோன்கள் கொண்டு தாக்குதல் நடத்திய உக்ரைன் !!
உக்ரைன் உளவுத்துறை தகவல்கள் ரஷ்யாவின் ஷைகோவ்கா விமானப்படை தளத்தின் மீது தற்கொலை தாக்குதல் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 52ஆவது குண்டுவீச்சு படையணியை சேர்ந்த இரண்டு Tu-22M குண்டுவீச்சு போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றன.
ரஷ்ய ஊடகங்களும் இந்த தாக்குதலை உறுதிபடுத்தும் வகையில் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த மாறுபட்ட தகவல்கள் அவற்றால் வெளியிடப்பட்டுள்ளன அதாவது ஒடுதளத்தின் மீது மோதியதாகவும் அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அதே நேரத்தில் வானூர்திகள் எதுவும் சேதம் அடையவில்லை எனவும் அவை தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ரஷ்ய ஊடகங்களில் உக்ரைனிய ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டதாக வெளியான காட்சிகள் பொய்யானவை எனவும் அந்த காட்சிகள் அர்மீனியா அஸர்பெய்ஜான் இடையேயான போரில் சுட்டு வீழ்த்தப்பட்ட துருக்கி ஆளில்லா தாக்குதல் விமானத்துடையது என்பதும் தெரிய வந்துள்ளது.
அதே நேரத்தில் தாக்குதல் நடத்திய உக்ரைன் தாக்குதல் தொடர்பான காணொளிகளை வெளியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது காரணம் அதில் தான் உண்மை தெரிய வரும், இது உண்மையானால் உக்ரைன் தொடர்ந்து இத்தகைய தாக்குதல்களை நடத்தும் என எதிர்பார்க்கலாம்.