அணையை உடைத்து தெற்கு உக்ரைனை மூழ்கடிக்க ரஷ்யா திட்டம் உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு !!

  • Tamil Defense
  • October 25, 2022
  • Comments Off on அணையை உடைத்து தெற்கு உக்ரைனை மூழ்கடிக்க ரஷ்யா திட்டம் உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு !!

தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சோன் பகுதியில் அமைந்துள்ள அணை ஒன்றை ரஷ்யா தகர்க்க திட்டமிட்டு உள்ளதாகவும் மேற்குலக நாடுகள் அதனை அனுமதிக்க கூடாது எனவும் உக்ரைன் அதிபர் வோலோடிமீர் செலன்ஸ்கி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது அணு ஆயுத தாக்குதல் மிரட்டல் பலனளிக்காத காரணத்தால் தற்போது ரஷ்யா இந்த அணையை உடைத்து தெற்கு உக்ரைனுடைய பெரும்பகுதியை முழ்கடிக்கவும், இங்கு மின்சாரம் உற்பத்தி நடைபெறுவதால் அதனையும் நிறுத்தி குளிர்காலத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தவும் ரஷ்யா திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ரஷ்யா உக்ரைனுடைய சுமார் 40 சதவிகிதத்திற்கும் அதிகமான மின்சார உள்கட்டமைப்பை அழித்து நாசம் செய்துள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டு கவனத்தை ஈர்த்துள்ளது ஆனால் ரஷ்யாவோ இதனை அடியோடு மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.