பிரிட்டிஷ் போர் விமானிகளை சீனா பணியமர்த்தும் விவகாரம் தடுப்பு சட்டம் இயற்ற பிரிட்டன் முடிவு !!

பிரிட்டன் விமானப்படையில் பணியாற்றி ஒய்வு பெற்ற சுமார் 30 போர் விமானிகளை சீனா தனது விமானப்படை போர் விமானிகளை பயிற்றுவிக்க பணியமர்த்திய செய்தி உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆஃப்ரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஒரு விமான பயிற்சி பள்ளி மூலமாக சீனா ஒய்வு பெற்ற இங்கிலாந்து, ஃபிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய போர் விமானிகளை தனது விமானிகளை பயிற்றுவிக்க பணியமர்த்தி உள்ளது.

எங்கேயும் கிடைக்காத அளவுக்கு சம்பளம் கொடுத்து இவர்களை சீனா பணியமர்த்திய நிலையில் அந்தந்த நாட்டு அரசுகள் சீனாவின் இந்த நடவடிக்கையை தடுக்க வேண்டி விசாரணை மற்றும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளன, அதில் பிரிட்டன் அரசு முன்னனியில் உள்ளது.

அதன்படி பிரிட்டன் அரசாங்கம் அனைத்து ராணுவ வீரர்களுக்கும் பொதுவான ரகசிய காப்பு சட்டத்தை மறு ஆய்வு செய்து மாற்றியமைக்க உள்ளதாகவும், ஏற்கனவே சீனாவில் பணியில் உள்ள விமானிகளுக்கு எச்சரிக்கை அனுப்பவும் அதை மீறும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டு உள்ளதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பி கூறியுள்ளார்.