இந்தியாவில் அமெரிக்க ஹெலிகாப்டரை தயாரிக்கும் டாடா குழுமம் !!

  • Tamil Defense
  • October 31, 2022
  • Comments Off on இந்தியாவில் அமெரிக்க ஹெலிகாப்டரை தயாரிக்கும் டாடா குழுமம் !!

அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் Lockheed Martin குழுமத்திற்கு சொந்தமானது தான் சிகோர்ஸ்கி Sikorsky நிறுவனம் தயாரிக்கும் ஹெலிகாப்டர் தான் S-76 இது உலக பிரசத்தி பெற்ற ஹெலிகாப்டர்களில் ஒன்றாகும்.

தற்போது இந்த S-76D வகை ஹெலிகாப்டர்களை இந்தியாவிலேயே லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் டாடா குழுமம் TATA ஆகியவை இணைந்து தயாரிக்க உள்ளன, 1977 முதல் இதுவரை சுமார் 800க்கும் அதிகமான ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டு உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் ராணுவ பயன்பாட்டு ரகத்திற்கான ஹெலிகாப்டர்களும் உண்டு ஆனால் இந்த S-76D ரக ஹெலிகாப்டர்கள் கார்ப்பரேட், தனி நபர், மருத்துவம் மற்றும் விஐபி போக்குவரத்திற்காகவும் 10க்கும் அதிகமான நாடுகள் அந்தந்த நாட்டு தலைவர்களின் போக்குவரத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

கடந்த பல ஆண்டுகளில் தொடர்ச்சியாக இந்த வகை ஹெலிகாப்டர்கள் பலமுறை மேம்படுத்தப்பட்டு பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டன மேலும் புத்தம் புதிய Pratt & Whitney PW200S Turboshaft என்ஜின்களையும் இதனுடன் இணைத்துள்ளனர் என்பது கூடுதல் தகவல் ஆகும்.