அமெரிக்க மற்றும் ரஷ்யா இடையே உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை !!

  • Tamil Defense
  • October 25, 2022
  • Comments Off on அமெரிக்க மற்றும் ரஷ்யா இடையே உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை !!

மிகவும் அரிதான நிகழ்வாக மே மாதத்திற்கு பிறகு ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஜெ ஆஸ்டின் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோய்கு ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஜெ ஆஸ்டின் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோய்குவிடம் போர் நடைபெற்று வந்தாலும் தொடர்புகளை துண்டிக்காமல் வைத்திருப்பது அவசியம் என வலியுறுத்தி உள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆந்தணி ப்ளிங்கென் பேசும்போது அமைதியான சுமுகமான தீர்வுக்கு எதிராகவே ரஷ்யாவின் செயல்பாடுகள் உள்ளதாகவும் அதிபர் விளாடிமிர் புடின் அமைதியை விரும்பவில்லை எனவும்

ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீதான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களை சுமார் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் உக்ரைனுடைய மின் உள்கட்டமைப்பு மற்றும் நீர் உள்கட்டமைப்பு ஆகியவற்றை நாசம் செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.