இந்திய கடற்படைக்கென உருவாக்கப்பட்ட பிரத்தியேக ஆளில்லா விமானம் !!

  • Tamil Defense
  • October 6, 2022
  • Comments Off on இந்திய கடற்படைக்கென உருவாக்கப்பட்ட பிரத்தியேக ஆளில்லா விமானம் !!

மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த Sagar Defense எனும் நிறுவனம் வருணா எனும் ஆளில்லா விமானத்தை உருவாக்கி உள்ளது, இதனால் ஆட்கள் அல்லது பொருட்களை சுமக்க முடியும் ஆனால் இது விமானியில்லா விமானமாகும்.

ஒரு நபர் அல்லது 130 கிலோ எடையிலான பொருட்களை சுமார் 25 கிலோமீட்டர் தொலைவுக்கு சுமக்கும் திறன் கொண்ட இதனை வான்வழி ஆம்புலன்ஸ் அல்லது சரக்கு போக்குவரத்திற்காக பயன்படுத்தி கொள்ளலாம் என நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரான மிருதுல் பப்பார் கூறினார்.

அதே போல் மற்றொரு இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான நிகுந்த் பராஷர் இந்த ஆளில்லா விமானத்தை கடற்படைக்கென பிரத்தியேகமாக தயாரித்தோம் இதனால் நகரும் கப்பல்களில் தரை இறங்கவும், மேல் எழும்பவும் முடியும் என்றார்.

மேலும் இந்திய கடற்படையுடன் கையெழுத்தான ஒப்பந்த்தின்படி ஒன்றரை ஆண்டுகளுக்குள் இத்தகைய 30 வருணா ஆளில்லா விமானங்களை டெலிவரி செய்ய வேண்டும் எனவும் இந்திய வரலாற்றில் கடற்படை கப்பல்களில் ட்ரோன்கள் இயங்க போவது முதல்முறை எனவும் அவர் கூறினார்.