உக்ரைனில் நிலைமை மோசமாக தான் உள்ளது முதல்முறையாக ஒப்பு கொண்ட ரஷ்ய தளபதி !!

  • Tamil Defense
  • October 21, 2022
  • Comments Off on உக்ரைனில் நிலைமை மோசமாக தான் உள்ளது முதல்முறையாக ஒப்பு கொண்ட ரஷ்ய தளபதி !!

சமீபத்தில் உக்ரைன் மீதான படையெடுப்பில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படைகளின் தளபதியாக ஜெனரல் செர்கேய் சுரோவிகின் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினால் நியமிக்கப்பட்டார்.

இவர் பெறுப்பு ஏற்ற பிறகு க்ரைமியா பாலம் மீதான தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் முக்கிய இலக்குகளை குறிவைத்து ரஷ்ய படைகள் ஏவுகணைகளை சரமாரி ஏவி மிகவும் பலத்த சேதத்தை உக்ரைனுக்கு ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் ஜெனரல் செர்கேய் சுரோவிகின் ரோஸ்ஸியா 24 Rossiya24 ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் உக்ரைனில் நிலைமை மோசமாக உள்ளது என முதல்முறையாக ஒப்பு கொண்டுள்ளார்.

ஜெனரல் செர்கேய் சுரோவிகினுக்கு ரஷ்யாவில் ஜெனரல் அர்மெகடான் என பட்டப்பெயர் உள்ளது, இதற்கு காரணம் சிரியாவிலும் செச்சென்யாவிலும் எதிரிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தி பல நகரங்களையே தரைமட்டம் ஆக்கியவர் எனபது குறிப்பிடத்தக்கது.