உக்ரைன் அதிபரின் சொந்த ஊர் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் !!

  • Tamil Defense
  • October 4, 2022
  • Comments Off on உக்ரைன் அதிபரின் சொந்த ஊர் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் !!

உக்ரைன் அதிபரான வோலோடீமீர் செலன்ஸ்கியின் சொந்த ஊர் மீது ரஷ்ய படைகள் தற்கொலை படை தாக்குதல் ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தெற்கு உக்ரைனில் உள்ள “க்ரிவ்யிஹ் ரிஹ்” தான் உக்ரைன் அதிபர் வோலோடீமீர் செலன்ஸ்கியின் சொந்த ஊராகும் இந்த ஊர் மீது ரஷ்ய படைகள் ஈரானில் இருந்து வாங்கிய தற்கொலை தாக்குதல் ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதில் ஒரு இரண்டு நிலை பள்ளிக்கூடம் அழிக்கப்பட்ட நிலையில் உக்ரைனிய விமானப்படை இத்தகைய ஐந்து ஈரானிய தற்கொலை தாக்குதல் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடீமீர் செலன்ஸ்கி க்ரிவ்யிஹ் ரிஹ், மைரோலியூபிவ்கா மற்றும் ஆர்கான்ஹெல்ஸ்கி போன்ற நகரங்களை விடுவது 129ஆவது பிரிகேடு வீரர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.