Breaking News

மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவால் பயிற்றுவிக்கப்பட்ட முன்னாள் ஆஃப்கன் சிறப்பு படை வீரர்களை உக்ரைனில் களமிறக்க ரஷ்யா திட்டம் !!

  • Tamil Defense
  • October 29, 2022
  • Comments Off on மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவால் பயிற்றுவிக்கப்பட்ட முன்னாள் ஆஃப்கன் சிறப்பு படை வீரர்களை உக்ரைனில் களமிறக்க ரஷ்யா திட்டம் !!

ஆஃப்கானிஸ்தான் தேசிய தரைப்படையின் சிறப்பு படைகள் தான் கமாண்டோ கோர் ஆகும் இதில் சுமார் ஏறத்தாழ 30,000 சிறப்பு படை கமாண்டோ வீரர்கள் பணியாற்றி வந்தனர், ஆஃப்கன் போரில் தாலிபான்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒரே ஆஃப்கன் படைப்பரிவு இதுவாகும்.

நேட்டோ சிறப்பு படைகள் மற்றும் இந்திய சிறப்பு படைகளால் பயிற்றுவிக்கப்பட்ட இந்த படையின் வீரர்கள் மிகுந்த போர் அனுபவம் வாய்ந்தவர்கள் ஆவார், தாலிபான்கள் கையில் ஆஃப்கானிஸ்தான் சிக்கிய பிறகு இந்த வீரர்களை நேட்டோ கைவிட்டது, அதையடுத்து பல வீரர்கள் பதுங்கி வாழந்து வருகின்றனர்.

அதுவும் குறிப்பாக பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்து அங்கு மிகவும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் இவர்களை பணிக்கு அமர்த்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது ரஷ்யாவின் தனியார் ராணுவ நிறுவனமான WAGNER இந்த முன்னாள் ஆஃப்கன் சிறப்பு படை வீரர்களுக்கு ஒரு நாளைக்கு 1000 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 82,000 ரூபாய் வரை சம்பளம் அளித்து,

அவர்களை பணியில் அமர்த்தி இவர்களை உக்ரைனில் களமிறக்க திட்டமிட்டு உள்ளனர், இவர்களில் 20,000 அல்லது 10,000 பேர் ரஷ்ய தரப்பில் களமிறங்கினாலும் கூட போரின் போக்கையே மாற்றும் அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

தற்போது மேலோட்டமாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது, ஆனாலும் ரஷ்யாவை பொறுத்த வரையில் இது மிகவும் நல்ல திட்டம் ஆகவே காத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.